கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று 1,868 புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், 1,115 வழக்குகள் வகை 1 மற்றும் 2 லும், 753 வழக்குகள் வகை 3, 4 மற்றும் 5 லும் இருந்தன. சிலாங்கூர் 286 புதிய சேர்க்கைகளைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து பேராக் (235) மற்றும் ஜோகூர் (201) உள்ளன. இதற்கிடையில் நேற்று 1,586 நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.
ஒரு அறிக்கையில் சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICUs) அவற்றின் மொத்த கொள்ளளவான 876 படுக்கைகளில் 41% இல் இருப்பதாகக் கூறினார்.
புத்ராஜெயா (167%), கிளந்தான் (69%), ஜோகூர் (68%), கோலாலம்பூர் (65%), சிலாங்கூர் (58%) மற்றும் பேராக் (53%) ஆகிய ஆறு மாநிலங்களில் உள்ள ICU படுக்கைகள் 50% திறனைத் தாண்டியுள்ளன. மொத்தம் 211 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. அவர்களின் அதிகபட்ச திறனில் 24% வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சிலாங்கூர் (109%), கோலாலம்பூர் (95%), பெர்லிஸ் (91%), பேராக் (91%), தெரெங்கானு (915), புத்ராஜெயா (86%) சரவாக் (78%), கிளந்தான் (76%), மலாக்கா (74%), ஜோகூர் (62%), பகாங் (58%) மற்றும் பினாங்கு (56%) ஆகிய இடங்களில் சாதாரண கோவிட்-19 படுக்கைகளின் பயன்பாடு 50% திறனைத் தாண்டியுள்ளது.
பொது மருத்துவமனைகளின் மொத்தத் திறனைப் பொறுத்தவரை (கோவிட்-19 மற்றும் கோவிட்-19 அல்லாத நோயாளிகள்), ஆபத்தான படுக்கைகளின் பயன்பாடு 45% ஆகவும், 56% ஐசியூக்கள் பயன்பாட்டில் உள்ளன. நேற்று இரண்டு கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியுள்ளன. மலேசியாவின் கோவிட்-19 தொற்று விகிதம் (R-nought அல்லது R0) 0.99 ஆக இருந்தது.









