RM2,000 முதலீடு செய்தால் ஆறு மணி நேரத்தில் RM35,000 கிடைக்கும் என்று கூறி, ஆசிரியையிடம் RM50,779 மோசடி!

சிபு, மார்ச் 14 :

இணைய முதலீட்டு மோசடிக் குழுவினால் ஒரு ஆசிரியர் RM50,779 இழந்தார்.

பாதிக்கப்பட்ட 52 வயதான நபருக்கு, மார்ச் 3 ஆம் தேதி மாலை 4.25 மணிக்கு டெலிகிராம் விண்ணப்பம் மூலம் இணைய முதலீடு தொடர்பான ஒரு செய்தி வந்ததாக, மாவட்ட காவல்துறையின் செயல் தலைவர் கண்காணிப்பாளர் டாக்டர் கொலின் பாபட் தெரிவித்தார்.

“RM2,000 ஆரம்ப முதலீட்டு மூலதனம் மட்டுமே தேவைப்படும் என்றும் இது முதலீட்டுத் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், XM நிறுவனத்தில் இருந்து ‘மும்தாஜ் அசார்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட முகவர் அவருடன் தொடர்புகொண்டார் என்றார்.

“RM2,000 முதலீடு செய்தால் லாபம் RM35,000 ஆக இருக்கும் என்பதால், மும்தாஜ் பாதிக்கப்பட்டவரை முதலீடு செய்ய வற்புறுத்துகிறார்.

“பாதிக்கப்பட்டவருக்கு முதலீடு செய்த ஆறு மணி நேரத்திற்குள் மொத்தம் RM35,000 பெறுவதற்கான நம்பிக்கையும் வழங்கப்பட்டது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் பாதிக்கப்பட்டவர் சம்பாதித்த மொத்த லாபத்தில் 30 சதவிகிதம் அல்லது RM8,750 மட்டுமே சம்மந்தப்பட்ட நிறுவனம் எடுக்கும் என்றும் சந்தேக நபர் (முகவர்) உறுதியளித்தார் என்று கொலின் கூறினார்.

2,000வெள்ளி செலுத்திய பிறகு, அதிக லாபம் பெற முதலீட்டுத் தொகையை அதிகரிக்கச் சொன்னார்.

“இரட்டை லாபம் கிடைக்கும் என்ற பேராசையில் இருந்த பாதிக்கப்பட்டவர் RM50,779 செலுத்தினார், ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு அவருக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட வருமானம் கிடைக்கவில்லை.

மேலும் “சந்தேக நபர் தனது முதலீட்டு மூலதனத்தை அதிகரிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். பின்னரே, பாதிக்கப்பட்டவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்” என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு மோசடி செய்ததற்காக குற்றவியல் சட்டம் (KK) பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here