கெத்தும் இலை ஏற்றுமதி குறித்த சனுசியின் கோரிக்கை அவருடைய சொந்த கருத்து என்கிறார் ஹம்சா ஜைனுடின்

விஷச் சட்டத்தின் (Poisons Act)  கீழ் கெத்தும் இலைகளை ஏற்றுமதி செய்ய அனுமதி இல்லை என்பதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது  என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார். கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி எம்டி நோர் கெத்தும்  ஏற்றுமதி குறித்து  விடுத்த கோரிக்கை “அவரது தனிப்பட்ட கோரிக்கை” என்று அவர் கூறினார்.

வியாழன் அன்று  “Kita Demi Negara” (தேசத்திற்காக நாங்கள்) பிரச்சாரத்தை தொடங்கிய பின்னர் செய்தியாளர் சந்திப்பில், “இது அவர் விடுத்த தனிப்பட்ட கோரிக்கையாக இருக்கலாம். ஆனால் சட்டத்திற்கு அது பொருந்தாது என்று கூறினார்.

புதன்கிழமை (மார்ச் 16) முஹம்மது சனுசி, தாய்லாந்தில் கெத்தும் இலைகளுக்கு அதிக தேவை இருப்பதால் ஏற்றுமதி வரி விதிப்பதன் மூலம் கெத்தும் இலைகளின் ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் மத்திய அரசு பயனடையும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here