செலாயாங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு பெண்ணை அனுமதிக்க மறுத்த இரண்டு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு டுவிட்டர் பரிமாற்றத்தில் சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா சம்பந்தப்பட்ட பாதுகாப்புக் காவலர்களைக் கண்டித்து மருத்துவமனை மறுசீரமைப்பு நடவடிக்கை எடுத்ததை உறுதிப்படுத்தினார்.
வெள்ளிக்கிழமை (மார்ச் 18) காலை சம்பவம் குறித்த டுவீட்டிற்கு பதிலளிக்கும் போது, ”நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுடன் கையாளும் போது தகுந்த தகவல்தொடர்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு அவர்களிடம் கூறப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
முன்னதாக காலை (மார்ச் 18), சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து இது குறித்து ஆராயப்படுகிறது என்றார். எங்கள் வழிகாட்டுதல்களின்படி நாங்கள் விரைவில் இந்த சிக்கலை ஆராய்வோம் என்று அவர் கூறினார்.
புதன்கிழமை (மார்ச் 16) எலிசா நதானியேல் டுவிட்டரில், கோவிட் -19 கட்டுப்பாடுகள் அல்லது ஒரு நோயாளிக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றால் அது நியாயமான காரணமாக இருந்திருக்கலாம். மாறாக நான் அணிருந்த உடை காரணமாக செலாயாங் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தனது தந்தையைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.
தான் முழங்காலுக்கு சற்று மேலே பாவாடை அணிந்திருந்திருந்தாக அவர் கூறினார். தன் உடையின் காரணமாக தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றும் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் தன் தந்தையை நினைத்தால் உடையை குறித்து யோசிக்க நேரமில்லை என்றும் அவர் கூறினார். மன்னிப்பு கேட்க மருத்துவமனை வெள்ளிக்கிழமை (மார்ச் 18) தன்னைத் தொடர்பு கொண்டதாகவும் இரண்டு காவலர்களும் விசாரணையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.







