கோலாலம்பூர், மார்ச் 25 :
கோலாலம்பூர் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (JSJK) மோசடி வழக்கு விசாரணைக்காக இருவரைத் தேடி வருகிறது.
கோலாலம்பூர் JSJKயின் தலைமை துணை ஆணையர் முகமட் மஹிதிஷாம் இஷாக் கூறுகையில், குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின்படி விசாரணை நடத்தப்படுகிறது.
“தேடப்படுபவர்கள் 47 வயதான கே. கே. தாமோதரன் என அடையாளம் காணப்பட்டார், அவரது கடைசி முகவரி தாமான் புக்கிட் லாபு, சிரம்பான், நெகிரி செம்பிலானில் உள்ளது.
இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள், டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வு அதிகாரியை, 019-5551641 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள ஏதேனும் ஒரு காவல்நிலையத்தில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, கோலாலம்பூரில் உள்ள ஸ்தாப்பாக் என்ற இடத்தில் இருந்த 57 வயதான டோங் கா ஹோ என்ற மற்றொரு நபரும் தேடப்படுகிறார்.
அந்த நபரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் , கோலாலம்பூர் JSJK விசாரணை அதிகாரி, இன்ஸ்பெக்டர் எஸ்.ஆனந்த் குமாரை 014-3070911 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல்நிலையத்தில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.