சமூக நல இலாகாவில் இருந்த 11 வயது சிறுவன் மரணமடைந்தது கழுத்தை நெரித்ததால் அல்ல; தலையில் அடிப்பட்டதே

குவாந்தானில்  சமூக நல இல்லத்தில் 11 வயது சிறுவன் தலையில் அடிபட்டதால்  மரணம் அடைந்ததாகவும் அவன் கூறியது போல் கழுத்தை நெரிக்கவில்லை என்று பகாங் காவல்துறைத் தலைவர்  டத்தோ ரம்லி முகமது யூசுப் கூறுகிறார்.

பாதிக்கப்பட்டவரின் பிரேத பரிசோதனையின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது என்றார். இந்த வழக்கு குறித்து 16 வயது சந்தேக நபரிடம் விசாரணைகள் நடந்து வருவதாக ரம்லி கூறினார்.

வெள்ளிக்கிழமை (மார்ச் 25) பகாங்  போலிஸ் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற 215ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டத்திற்குப் பிறகு, சந்தேக நபருக்கு எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லை. மார்ச் 27 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்  என்று அவர் கூறினார்.

4 வெள்ளியை எடுத்ததாக சமூக நல இலாகாவின் 16 வயது மாணவருடன் ஏற்பட்ட  தகராறில் 11 வயது பாதிக்கப்பட்டவர்  கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையில் காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here