குடிப்போதையில் வாகனமோட்டி போலீஸ்காரரின் மரணத்திற்கு காரணமானவருக்கு 4 ஆண்டு சிறை; 15,000 வெள்ளி அபராதம்

குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒரு போலீஸ்காரருக்கு மரணத்தை ஏற்படுத்தியதோடு மற்றொருவரை காயப்படுத்திய குற்றத்திற்காக ஒரு நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் RM15,000 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.

மாஜிஸ்திரேட் புத்ரி நூர்ஷீலா ரஹிமி N. மோகன் ராவ் 48, வழக்குத் தொடருக்கு எதிராக நியாயமான சந்தேகத்தை எழுப்பத் தவறியதைக் கண்டறிந்த பின்னர் இந்த  தண்டனையை வழங்கினார். மேலும் மோகனின் ஓட்டுநர் உரிமத்தை ஐந்தாண்டுகளுக்கு ரத்து செய்யவும் உத்தரவிட்டார்.

இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

2018,டிசம்பர் 5 ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் ஜாலான் செமாந்தினில் உள்ள ஜாமிரி சின்சியன் (25) மரணத்திற்கும் உஸ்மான் இப்ராஹிம் (23) என்பவரை காயப்படுத்தியதற்காகவும் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இரத்தத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகவும் மோகன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் RM20,000 வரை அபராதம் விதிக்கிறது.

2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கின் விசாரணையின் போது, ​​இரு தரப்பு சாட்சிகள் உட்பட மொத்தம் 17 சாட்சி வழங்க அழைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here