சாலையோரத்தில் பற்றி எரிந்த சொகுசு காரினால் சாலைப் பயனர்கள் பீதி!

சுங்கை பெசார், மார்ச் 27 :

இங்குள்ள கம்போங் சுங்கை நிபா அருகே ஜாலான் பெர்செகுத்துவான் கிள்ளான் -தெலுக் இந்தான் வழியாகச் சென்ற சாலைப் பயணிகள், அவ்வழியில் பிஎம்டபிள்யூ சொகுசு கார் தீப்பிடித்ததால் பீதியடைந்தனர்.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குனர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், காலை 11.50 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது.

அவர் கூறியபடி, சுங்கை பெசார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து ஆறு பேர் கொண்ட இயந்திரம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டத்து.

“அக்குழுவினர் அங்கு வரும்போது, ​​ஒரு கார் தீப்பிடித்து எரிவது கண்டுபிடிக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“இந்தச் சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை, ஆனால் கார் 80 சதவீதம் அழிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்பின் மதிப்பு இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here