சிலாங்கூரில் RM3.33 மில்லியன் மதிப்புள்ள 1.33 டன் கஞ்சா போலீசாரால் பறிமுதல்; நால்வர் கைது!

ஷா ஆலாம், மார்ச் 27 :

கடந்த வியாழன் அன்று சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட நான்கு தனித்தனி சோதனைகளைத் தொடர்ந்து, சுமார் RM3.33 மில்லியன் மதிப்புள்ள 1.33 டன் கஞ்சாவை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை இதுபற்றிக் கூறுகையில், புக்கிட் அமான் NCID மற்றும் சிலாங்கூர் NCID ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கை, மாலை 4.40 மணி மற்றும் இரவு 11 மணி அளவில் சுபாங் ஜெயா, ரவாங், செமினி, சிலாங்கூர் ஆகிய நான்கு இடங்களில் 23 முதல் 46 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

“சோதனைகளின் போது, ​​போதைப்பொருள்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட ஒரு வீட்டில், தரம் 2 வகை கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்து கைப்பற்றினர்,” என்று அவர் இன்று சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடந்த ஊடக சந்திப்பில் கூறினார்.

“இந்த ஆண்டு ஜனவரி மாத நடுப்பகுதியில் இருந்து போதைப்பொருள் கடத்தல் குழு செயல்படுவதாகவும், சந்தேக நபர்களில் இருவர் வேலையில்லாதவர்கள் என்றும், ஒருவர் தொழிலதிபர் மற்றும் மற்றொருவர், விநியோக தொழிலாளி என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், சந்தேக நபர்களில் ஒருவருக்கு Tetrahydrocannabinol (THC) இருப்பது கண்டறியப்பட்டது என்றும் அவர்களில் ஒருவருக்கு போதைப்பொருள் தொடர்பான இரண்டு முந்தைய குற்றவியல் பதிவுகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், அவர்களிடமிருந்து “நான்கு வாகனங்கள் மற்றும் சுமார் RM331,900 ரொக்கப் பணம் உட்பட பல்வேறு சொத்துக்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் மற்றும் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருள் மற்றும் சொத்துக்கள் மதிப்பு சுமார் RM3.7 மில்லியன்” என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படுகிறது மற்றும் சந்தேக நபர்கள் விசாரணைகளை எளிதாக்கும் வகையில் மார்ச் 25 முதல் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here