சாலையோரத்தில் எரியும் காரில் ஒருவர் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார்

ஜோகூர் பாரு, மார்ச் 28 :

நேற்றிரவு இங்குள்ள பெருமகான் இஸ்கந்தர் மலேசியா (Prisma) க்கு வெளியே உள்ள சாலையோரத்தில், எரியும் காரில் ஒருவர் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

இஸ்கந்தர் புத்திரி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் துல்கைரி முக்தார் கூறுகையில், நள்ளிரவு 12.03 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக, பொதுமக்களிடமிருந்து தமது துறைக்கு அழைப்பு வந்தது.

முதற்கட்ட தகவல்களின்படி, குடியிருப்பு பகுதியில் எரியும் காரில் ஒருவர் சிக்கியதாக கூறப்பட்டது.

அவரது கூற்றுப்படி, ஆரம்பகட்ட விசாரணையின் முடிவுகளில் கார் நிறுத்தப்பட்டிருந்தது ஆனால் என்ஜின் இயங்கிக்கொண்டிருந்தது, விளக்குகள் எரிந்த நிலையில் இருந்தன மற்றும் கார் தீப்பிடித்திருந்தது என்று கூறினார்.

சம்பவ இடத்தில் நடந்த விசாரணையில் காரில் ஒருவர் கிடந்ததைக் கண்டுபிடித்ததாகவும், பாதிக்கப்பட்டவரின் அடையாள விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

“போலீசார் சம்பவ இடத்தில் எந்த விவரங்களோ அல்லது மதிப்புமிக்க பொருட்களையோ கண்டுபிடிக்கவில்லை.

“பாதிக்கப்பட்டவரின் உடல் ஜோகூர் கன்டிஜென்ட் போலீஸ் தலைமையகத்தின் தடயவியல் உறுப்பினர்களால் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அகற்றப்பட்டது என்றும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது என்றும் கூறினார்.

பாதிக்கப்படடவரின் கைகள் மற்றும் விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக ஜோகூர் சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் ஏழு பேர் கொண்ட இஸ்கந்தர் புத்திரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழு மற்றும் ஒரு இயந்திரம் சம்பவ இடத்திற்கு விரைந்தது.

அவரைப் பொறுத்தவரை, அங்கு வந்த முகமட் கைரி ஜைனுடின் தலைமையிலான ஆபரேஷன் புரோட்டான் வைரா காரில் தீப்பிடித்தது மற்றும் சுமார் 50 சதவீத சேதத்தை அது சந்தித்திருந்தது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் அது தொடர்பில் காவல்துறை விசாரணை மநடைபெறுவதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here