ஜோகூர் :
இன்று (நவம்பர் 2) காலை 8 மணி நிலவரப்படி, ஜோகூரில் வெள்ளம் காரணமாக தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

ஜோகூர் குடிமைத் தற்காப்புப் படையின் (APM) கூற்றுப்படி, “தற்போது 22 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், நேரத்தில் நேற்றிரவு ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் அங்குள்ள வெள்ள நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்” என்று அது வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மூவாரில் உள்ள கம்போங் பாரிட் தெங்கா மற்றும் பத்து பஹாட் பகுதியிலுள்ள செம்பராங் ஆறு இன்னும் ஆபத்தான நிலையை எட்டவில்லை என்றும் APM குறிப்பிட்டுள்ளது.





















