பல்வேறு ஆமைகளின் உறுப்புகளை வைத்திருந்த நபர், கடல்சார் போலீசாரால் கைது

செம்போர்னா, மார்ச் 30 :

நேற்று, இங்குள்ள கம்போங் பங்காவ்-பங்காவ் என்ற இடத்தில், படகில் வெட்டப்பட்ட பல்வேறு ஆமைகளின் உறுப்புகளை வைத்திருந்த ஒரு நபரை கடல்சார் போலீஸ் படை (PPM) கைது செய்ததுடன் ஆமைகளின் உடல் உறுப்புகளையும் பறிமுதல் செய்தனர்.

செம்போர்னா கடல்சார் போலீஸ் படை செயல்பாட்டுத் தலைமையகத் தளபதி, துணை கண்காணிப்பாளர் முகமட் இஸ்மாயில் கூறுகையில், அவரது துறையினர் காலை 10 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்று, ஒரு வீட்டின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த படகை அணுக முன்னர், சந்தேகத்திற்கிடமான நிலையில் 31 வயதுடைய ஒரு நபரைக் கண்டனர்.

அதனைத்தொடர்ந்து, அந்தபி படகில் ஆய்வு செய்ததில் 25 ஆமை விளிம்பு செதில்கள் (RM3,500), 13 ஆமைகளின் பிளாஸ்ட்ரான் (மார்பு தோல்) (RM13,000) மற்றும் கத்திகள், கோடாரிகள், சுத்தியல் மற்றும் ஆமைகளை தோலுரிக்க பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல்வேறு உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன” என்று இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்கள் மற்றும் படகுகள் என்பன செம்பொர்னா PPM தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வனவிலங்கு திணைக்களத்திற்கு இவ்வழக்கு பரிந்துரைக்கப்பட்டதாக முகமட் கூறினார்.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் (EPHL) 1997 இன் படி மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here