மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைதியான சூழல்

புக்கிட் காயு ஈத்தாம், ஏப்ரல் 1 :

புக்கிட் காயு ஈத்தாம் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்தின் நுழைவாயிலான மலேசியா-தாய்லாந்து எல்லை, இன்று காலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக மீண்டும் திறக்கப்பட்டது.

இன்று காலை 6 மணிக்கு பாதுகாப்புப் பணியாளர்கள் கவுன்டர்களைத் திறக்கத் தொடங்கினர், ஆனால் காலை 8 மணி வரை சில நபர்கள் மட்டுமே எல்லை வாயில் வழியாக அனுமதிக்கப்பட்டனர் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

தாய்லாந்து நாட்டுக்குள் நுழைய விரும்பும் நபர்களுக்கு தாய்லாந்து அரசு விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளே இதற்குக் காரணம்.

மலேசிய குடிநுழைவுத் துறையின் (JIM) கெடாவின் செய்தித் தொடர்பாளர் இதுபற்றிக் கூறுகையில், அதன் அதிகாரிகள் நாட்டின் எல்லையைத் திறப்பதுடன் அதனுடன் இணைந்த ஆரம்ப தயாரிப்புகளைச் செய்து வருவதாகக் கூறினார்.

இருப்பினும், தாய் பாஸ் அனுமதி போன்ற நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், இன்று காலை சரியாக 6 மணிக்கு திறக்கப்பட்ட குடிநுழைவுச் சோதனைச் சாவடியை ஒரு சில வாகனங்கள் மட்டுமே கடக்க முடிந்தது என்று அவர் கூறினார்.

“நாட்டிற்குச் செல்ல விரும்புவோருக்கு தாய்லாந்து அதிகாரிகளால் இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

“எல்லையில் உள்ள பல்வேறு துறைகள் மற்றும் ஏஜென்சிகள் சுமூகமாக நுழைவதையும் வெளியேறுவதையும் உறுதிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here