பத்து பஹாட், ஏப்ரல் 3 :
புனித நோன்பு மாதமான ரமலான் ஆரம்பமானதை தொடர்ந்து, ஜோகூர் மாநிலத்தில் உள்ள மசூதிகள் மற்றும் சூராவ்-களில் நோன்பு துறக்கும் நிகழ்வுகளை நடத்த ஜோகூர் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இருப்பினும், இந்நிகழ்வுகளில் ஒரு தடவையில் 50 பேர் மட்டுமே வருகை தரலாம் என்று மாநில இஸ்லாமிய மத விவகாரக் குழுத் தலைவர் முகமட் ஃபேர்ட் முகமட் காலித் தெரிவித்தார்.
50க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால், மசூதி மற்றும் சூராவ் நிர்வாகம் அக்கூட்டங்களுக்கு பேக் செய்யப்பட்ட உணவை வழங்க வேண்டும் என்று அவர் நேற்றிரவு மஸ்ஜிட் பாரிட் பெசார் செமாராவில் நடந்த தாராவிஹ் தொழுகைக்குப் பிறகு ஊடகங்களிடம் கூறினார்.
மசூதிகள் மற்றும் சூராவ் பகுதியில் பூபுர் லாம்புக் (Bubur lambuk) விநியோக நிகழ்ச்சியும் அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் சமையல் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக முகமட் ஃபேர்ட் கூறினார்.