தனது குழந்தைகளின் மத மாற்றத்தை ரத்து செய்யக் கோரிய தனித்து வாழும் தாயான லோ சிவ் ஹாங்கின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சமய போதகர் ஃபிர்தௌஸ் வோங் வை ஹங் சார்பாக எதிர் போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை கோலாலம்பூரில் உள்ள வாங்சா மாஜூவில் பதிவு செய்யப்பட்டது. தனக்கு கோவிட் -19 உறுதி செய்யப்பட்டிருப்பதால் உதவியாளர் தனது சார்பாக புகாரினை தாக்கல் செய்ததாக ஃபிர்தௌஸ் வோங் எஃப்எம்டியிடம் கூறினார்.
அறிக்கையின் நகலில் ஃபிர்தௌஸ் வோங் வீடியோவில் லோ தனது குழந்தைகளை இஸ்லாத்திற்கு மாற்றியதை ரத்து செய்ய கோரும் அவரது வழக்கு “அவமானம் மற்றும் அழுத்தம்” எதுவும் இல்லை என்று கூறியது.
ஃபிர்தௌஸ் வோங் தனது குழந்தைகளின் மதமாற்றம் தொடர்பான நீதித்துறை மறுஆய்வுக்கான விண்ணப்பத்தை கைவிடுமாறு, முகநூல் தொடர் இடுகைகளில் கூறியிருந்தார். அது தன்னை “சங்கடத்தையும் அழுத்தத்தையும்” ஏற்படுத்த முயற்சித்ததாகக் கூறி லோ முன்பு ஒரு போலீஸ் புகாரினை தாக்கல் செய்திருந்தார்.
லோ மேலும் கூறுகையில் நான் வேறொருவருடன் இருப்பதாக கூறி ஃபிர்தௌஸ் வோங் என்னை அவதூறாக பேசியதாகக் கூறினார். இருப்பினும், அந்த வீடியோவில் அப்படி எதுவும் கூறப்படவில்லை என்று வோங்கின் எதிர் அறிக்கை கூறுகிறது.