இலங்கைக் குழந்தைகளை ஐரோப்பாவிற்கு கடத்தும் கும்பலை சேர்ந்த தம்பதியினர் கைது

இலங்கைச் சேர்ந்த குழந்தைகளை ஐரோப்பாவிற்கு கடத்துவதற்கு மலேசிய அனைத்துலக கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்திய ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஒரு திருமணமான உள்ளூர் தம்பதியரைக் குடிநுழைவுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமையன்று (ஏப்ரல் 12) கோலாலம்பூர் குடிநுழைவுத் தலைமையகத்திற்கு குறித்த இலங்கைக் குழந்தைக்கு மலேசிய கடவுச்சீட்டைப் பெறுவதற்காக சென்றபோது, அந்த மலேசிய தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர், டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

‘‘Bahnu Internationals’’ என்று அடையாளம் காணப்பட்ட கும்பல், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஏழை மலேசியப் பெற்றோரைப் பயன்படுத்திக் கடவுச்சீட்டுகளைப் பெறுவதாக அவர் கூறினார்.

குழந்தைக்கு பாஸ்போர்ட் செய்ய வேண்டும் என்று கூறி, 12 வயதுக்கு குறைந்த குழந்தையின் பிறப்புச் சான்றிதழை குடிநுழைவு அலுவலகத்திற்கு கொண்டு வருவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

“இருப்பினும், குடிவரவு கவுண்டரில் விண்ணப்பம் செய்யும் போது, மலேசியக் குழந்தையின் கைரேகை மற்றும் புகைப்படம் எடுப்பதற்குப் பதிலாக, ஏறக்குறைய அதே வயதுடைய இலங்கை பிள்ளை கவுண்டருக்கு அழைத்துச் செல்லப்படுவார்.

“அதன் பின், குறித்த கும்பலின் மூளையாக இருக்கும் கணவன்-மனைவி, மலேசிய கடவுச்சீட்டில் உள்ள இலங்கைக் குழந்தையை ஐரோப்பாவிற்கு அழைத்து வருவதன் மூலம் ‘டிரான்ஸ்போர்ட்டராக’ செயல்படுவார்கள்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறையின் போது, குறித்த பிள்ளை மலாய் மொழி பேசத் தெரியாது இருந்ததாகவும், அது அதனுடைய பாதுகாவலரை விட கணிசமாக வித்தியாசமாகத் தெரிந்தபோது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தைச் செயலாக்கிய குடிநுழைவு அதிகாரி ஏதோ தவறாக இருப்பதாக சந்தேகித்ததாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here