கெந்திங் ஹைலேண்ட்ஸில் கார் பள்ளத்தாக்கில் தவறி விழுந்ததில் ஓட்டுநர் படுகாயம்

பெந்தோங், ஏப்ரல் 5 :

இன்று காலை 8.58 மணியளவில் இங்குள்ள கெந்திங் ஹைலேண்ட்ஸ் வரையிலான பாதையின் 5.6 ஆவது கிலோமீட்டரில், அவர் ஓட்டிச் சென்ற கார் பள்ளத்தாக்கில் தவறி விழுந்ததில், ஒருவர் படுகாயமடைந்தார் .

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பகாங் மாநில மக்கள் தொடர்பு அதிகாரி, சுல்ஃபாட்லி ஜகாரியா இதுபற்றிக் கூறுகையில், 49 வயதான கார் ஓட்டுநர் ஒரு புரோட்டோன் சாகா காரை ஓட்டியதாகக் கூறினார்.

“தகவல் கிடைத்ததும், கெந்திங் ஹைலேண்ட்ஸ் தீயணைப்பு நிலையத்திலிருந்து மீட்புக் குழு உடனடியாக இரண்டு இயந்திரங்களைப் பயன்படுத்தி, அதிகாரிகள் உட்பட 10 உறுப்பினர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்றது.

“இடத்திற்கு வந்ததும், அந்த நேரத்தில் வாகனத்தில் ஒரு பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருந்ததை மீட்புக் குழு உறுதிப்படுத்தியது.

“சோதனைக்குப் பிறகு, ஓட்டுநரின் முகம், கால்கள் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

“விபத்துக்குட்பட்டு, சிதைந்த வாகனத்திலிருந்து பாதிக்கப்பட்டவரை தீயணைப்புப் படை மீட்டது” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக செலாயாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக சுல்ஃபாட்லி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here