உம்ரா செய்வதற்காக அஹமட் ஜாஹிட்டின் கடப்பிதழை நீதிமன்றம் விடுவித்தது

கோலாலம்பூர், ஏப்ரல் 8 :

முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, தாம் உம்ரா பயணம் செய்வதற்காக தனது கடப்பிதழை விடுவிக்கக்கோரி உயர்நீதிமன்றம் விண்ணப்பத்ததை தொடர்ந்து, அவரது கடப்பிதழை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ கொலின் லாரன்ஸ் செக்வேரா, அம்னோ தலைவருமான ஜாஹிட் ஹமிடியின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டார், அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் டத்தோ ராஜா ரோசெலா ராஜா தோரன், இந்த விண்ணப்பத்திற்கு எந்த அட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு அக்டோபரில், முதுகு மற்றும் கழுத்து வலிக்காக ஜெர்மனியில் உள்ள ஒரு முன்னணி நிபுணரிடம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, பறிமுதல் செய்யப்பட்ட அவரது பாஸ்போர்ட்டை தற்காலிகமாக திரும்பப் பெற உயர்நீதிமன்றம் அனுமதித்ததும் நினைவுகூறத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here