கோத்தா கினாபாலு, ஏப்ரல் 10 :
தொடர் மழையால், இங்குள்ள தெலிபோக் குடியேற்றத் திட்டத்தின் 5 வீடுகள், இன்று, நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்தன.
இந்த சம்பவம் அதிகாலை 5.30 மணியளவில் நடந்ததாகவும், நேற்று முதல் வீட்டை காலி செய்யும்படி உத்தரவிடப்பட்ட நிலையில், குடியிருப்பாளர்கள் எவரும் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் இதுபற்றிக் கூறுகையில், தங்களுக்கு அதிகாலை 5.59 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கூறினார்.
தகவலைத் தொடர்ந்து, அவசர சேவைகள் உதவிப் பிரிவின் (ERMS) இயந்திரங்கள் மற்றும் ஒரு வேன் உட்பட 11 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
“சம்பவ இடத்திற்கு வந்தபோது, தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருந்ததுடன் ஐந்து வீடுகள் சேதமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
“பின்னர் தீயணைப்புப் படையினர் அந்த இடத்தை காலி செய்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.














