60 வயதுக்கு மேற்பட்ட உடல்நல பாதிப்பு கொண்டவர்களுக்கு இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசிக்கு பரிந்துரை

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 15 :

60 வயதிற்கு மேற்பட்ட உடல்நல பாதிப்பு கொண்டவர்கள், பண்டிகைக் காலத்துக்கு முன்னதாக இரண்டாவது கோவிட்-19 பூஸ்டர் ஷாட்டை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று ProtectHealth Corporation Sdn Bhd CEO டாக்டர் அனாஸ் அலாம் பாய்ஸ்லி இன்று தெரிவித்தார்.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதிற்குட்பட்ட உடல்நல பாதிப்பு கொண்டவர்கள் அதிக ஆபத்துள்ளவர்களாகவும், கடுமையான கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகக்கூடியவர்களாகவும் கருதப்படுகின்றனர் என்றார்.

“ஹரி ராயா பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு, அதிக ஆபத்துள்ள நபர்கள் தங்கள் இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைப் பெறுவதன் மூலம் கோவிட் -19 வைரஸுக்கு எதிராக சிறந்த சுய பாதுகாப்பைப் பெறுமாறு நான் கடுமையாக அறிவுறுத்துகிறேன்,” என்று அனஸ் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறுகையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடல்நல பாதிப்பு கொண்டவர்கள் இரண்டாவது கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். ஆனால் இரண்டாவது பூஸ்டர் டோஸ் கட்டாயம் இல்லை என்றார்.

இந்த இரண்டாவது பூஸ்டர் டோஸாக Pfizer-BioNTech தடுப்பூசி பயன்படுத்தப்படும் என்றும் கைரி கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here