அரசு நிலங்களில் சட்டவிரோத ஆலயங்களுக்குத் தடை: கூட்டரசு பிரதேசம் மற்றும் சிலாங்கூரில் புதிய அதிரடி!

கோலாலம்பூர்:

நாட்டின் கூட்டரசு பிரதேசங்களில் அரசு நிலங்களின் மேல் புதிய இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத்தலங்கள் கட்டுவதற்கோ அல்லது தற்போதுள்ள இடங்களை விரிவுபடுத்துவதற்கோ உடனடித் தடை விதிக்கப்படுவதாகக் கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா யோ அறிவித்துள்ளார்.

முறையான அனுமதியின்றி அரசு நிலங்களில் கட்டப்பட்டுள்ள 163 வழிபாட்டுத்தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சமூக உணர்வுகளைக் கருத்திற்கொண்டு இந்த விவகாரத்தைச் சுமூகமாகக் கையாள 11 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் சிறப்புத் துணைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

இதேவேளை, சிலாங்கூர் மாநிலத்திலும் நில ஆக்கிரமிப்பு, அங்கீகரிக்கப்படாத ஆலயப் பிரச்சினைகளைத் தீர்க்க மாவட்டப் பாதுகாப்புப் பாதுகாப்புக் குழுக்கள் (JKKD) அமைக்கப்பட்டுள்ளதாக மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

நில உரிமையாளர்களுக்குச் சட்டச் செலவுகள் ஏற்படாமல் இருக்கவும், பொது அமைதியைப் பாதுகாக்கவும் பேச்சுவார்த்தை, முறையான சட்ட அமலாக்கங்கள் மூலம் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இரு மாநில அரசாங்கங்களும் திட்டமிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here