கோலாலம்பூர், ஏப்ரல் 18 :
ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், கடந்த 3 ஆண்டுகளாக கிள்ளான் பள்ளத்தாக்கில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த ஒரு பெண் உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
வியாழன் மற்றும் வெள்ளியன்று, இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை Op Gaston நடவடிக்கை மூலம், கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள கொண்டோமினியம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து வெவ்வேறு சோதனைகளில், 20 முதல் 45 வயதுடைய ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கோலாலம்பூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைமை துணை ஆணையர் ஜஸ்மிரோல் ஜமாலுடின் கூறினார்.
சோதனையின் போது, சியாபு 3.2 கிலோகிராம், ஹெரோயின் (8.4 கிலோ), கஞ்சா (10.8 கிலோ), எரிமின் 5 மாத்திரைகள் (3,150 மாத்திரைகள் அல்லது 0.9 கிலோ) மற்றும் கெட்டமைன் (365 கிராம்) ஆகிய எடையுள்ள போதைப் பொருட்களைக் கைப்பற்றினோம்.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து போதைப்பொருட்களும் “48,594 போதைபித்தர்கள் பயன்படுத்த போதுமானது என்றும் மொத்த போதைப்பொருட்களின் மதிப்பு RM386,757 என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவர்களிடமிருந்து நாங்கள் RM2,780 பணத்தையும் பறிமுதல் செய்துள்ளோம்” என்று கோலாலம்பூர் கன்டிஜென்ட் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
“கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்ப சிறுநீர் பரிசோதனையின் முடிவுகள் ஆறு சந்தேக நபர்களில் நான்கு பேர் மெத்தம்பேட்டமைன் மற்றும் கஞ்சாவுக்கு சாதகமாக இருப்பதைக் கண்டறிந்ததாகவும் “அவர்களில் மூவருக்கு குற்றவியல் பதிவுகள் இருப்பதும் சோதனையில் கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.
ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் படி விசாரணையில் உதவுவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் ஏப்ரல் 15 முதல் 21 வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.