கூச்சிங், ஏப்ரல் 18 :
பள்ளி மாணவி உட்பட மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் நபர், போலீசாரால் தேடப்பட்டுவந்த நிலையில், நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
47 வயதான சந்தேக நபர், நேற்று அதிகாலை 5 மணியளவில் லுண்டுவில் கைது செய்யப்பட்டதாக கூச்சிங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அஹ்ஸ்மோன் பாஜா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர், ஏப்ரல் 12 ஆம் தேதி செமெரியாங் பத்து என்ற இடத்தில் இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து. ஏப்ரல் 15 ஆம் தேதி, ஜாலான் மாடாங் – டெப்போ லிங்க், கூச்சிங்கில் பள்ளியிலிருந்து வீடு திரும்புவதற்காக பாதிக்கப்பட்ட சிறுமி தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, சந்தேக நபர் அந்த 16 வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக அவர் கூறினார்.
“அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சந்தேக நபர், பாதிக்கப்பட்டவரிடம் ஏதோ கேட்பது போல் நடித்துள்ளார். பின்னர் தகாத முறையில் சிறுமிஇடம் நடந்துகொண்ட அவர், பின்னர் தப்பித்து சென்றுள்ளார் என்று அவர் கூறினார்.
சந்தேக நபர்களை கைது செய்ததன் மூலம், மூன்று ஆபாச வழக்குகளை போலீசார் தீர்த்து வைத்துள்ளதாக அஸ்மோன் கூறினார்.
“சந்தேக நபர் இன்று முதல் ஏப்ரல் 21 வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்” என்று அவர் கூறினார்.