கழுத்து மரத்தில் கட்டப்பட்ட நிலையில் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

மலாக்கா, ஏப்ரல் 18 :

பூலாவ் மலாக்காவில், இன்று கழுத்து கயிற்றால் மரத்தில் கட்டப்பட்ட நிலையில், ஆண் ஒருவரின் சடலத்தை கண்டு மீனவர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.

இன்று நண்பகல் 12 மணியளவில் 27 வயதான உள்ளூர் இளைஞனின் உடல் உட்கார்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

பண்டா ஹிலீர் காவல்நிலையத்தில் நண்பகல் 12.09 மணிக்கு, அந்த மீனவர் அளித்த தகவலின்படி, சம்பவம் குறித்து தமது துறைக்கு தகவல் கிடைத்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.

தகவல் கிடைத்ததும், மலாக்கா காவல்துறை தலைமையகத்தின் (IPK) குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJ) D10 தடயவியல் பிரிவு உட்பட விசாரணை அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

“பரிசோதனையின் முடிவுகளில் இறந்தவர் 27 வயதான கம்போங் ஜெயா காடிங், குவாந்தான், பகாங்கைச் சேர்ந்த உள்ளூர் மனிதர் என்று கண்டறியப்பட்டது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

உயிரிழந்தவர் கழுத்தில் கயிற்றால் கட்டி, மரத்தில் கட்டப்பட்டு, அமர்ந்த நிலையில் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​​​அவரது சடலம் முழுமையாக உடை உடுத்தியபடி இருந்தது, இதுவரை சம்பவ இடத்தில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

“உடல் பிரேத பரிசோதனைக்காக, மலாக்கா மருத்துவமனை தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டது மற்றும் இவ்வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here