அரை மில்லியன் வெள்ளி மதிப்புள்ள சட்டவிரோத பட்டாசு விநியோகம் முறியடிப்பு; நால்வர் கைது

ஜோகூர் பாரு, ஏப்ரல் 19 :

நேற்று, மூவார் மற்றும் கெம்பாஸைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோத பட்டாசு விநியோகம் மற்றும் விற்பனை செய்யும் நான்கு பேர் கைது செய்யப்பட்டதுடன், அரை மில்லியன் வெள்ளி மதிப்புள்ள பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர்களில், 27 மற்றும் 41 வயதுடைய இந்தோனேசியப் பிரஜை உட்பட, நான்குபேரும் பொது நடவடிக்கைப் படையின் (PGA) 5வது பட்டாலியன் உறுப்பினர்கள் குழுவினால், காலை 11 மணி மற்றும் மாலை 6 மணிக்கு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இரண்டு சோதனைகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.

பொது நடவடிக்கைப் படையின் (PGA 5) கட்டளை அதிகாரி, கண்காணிப்பாளர் டிமின் அவாங் கூறுகையில், முதல் கைது தாமான் பெர்டாமா இந்தா, சுங்கை அபோங், மூவார் ஆகிய இடங்களில் நடந்தது, இதில் உள்ளூர் மற்றும் இந்தோனேசிய ஆண்களைக் கைது செய்தனர்.

“லோரியில் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு வகையான பட்டாசுகள் அடங்கிய ஐந்து பெரிய பழுப்பு நிற பெட்டிகளும், ஏழு சாக்கு பந்து பட்டாசுகளும், வளாகத்திற்குள் 434 பட்டாசுகள் மற்றும் ஐந்து சாக்குகளில் பந்து பட்டாசுகள் இருந்தன.

“பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பட்டாசுகளின் மொத்த மதிப்பு RM560,300 என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

37 மற்றும் 41 வயதுடைய இரண்டு உள்ளூர் சந்தேக நபர்கள் தாமான் புக்கிட் கெம்பாஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில் கைது செய்யப்பட்டதாக டிமின் கூறினார், இவர்களிடமிருந்த்து RM101,950 மதிப்புள்ள பல்வேறு வகையான பட்டாசுகள் மற்றும் வாகனங்களையும் தமது துறை கைப்பற்றியது என்றார்.

சந்தேக நபர் சிறு வியாபாரிகளுக்கு பட்டாசுகளை விநியோகிப்பதற்கு முன்னர், பட்டாசுகளை சேமித்து வைக்கும் இடமாக அந்த வளாகத்தை பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

அயல்நாடுகளில் இருந்து நோன்புப்பெருநாள் சந்தைக்காக இந்த பட்டாசுகள் விநியோகம் செய்யப்படுவதாக நம்பப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, அவரது துறையினரால் இதுவரை கைப்பற்றப்பட்ட தொகையைவிட இதுவே மிகப்பெரிய கைப்பற்றல் ஆகும், மேலும் சந்தேக நபர்கள் மற்றும் பொருட்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக மூவார் மற்றும் ஜோகூர் பாரு உதாரா மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) ஒப்படைக்கப்பட்டனர்.

“இந்த வழக்கு வெடிபொருள் சட்டம் 1957 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார், குற்றச் செயல்கள் மற்றும் கடத்தல் பற்றிய தகவல்களை 077557280 இடர்/செயல்பாட்டு அலுவலக ஹாட்லைனில் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here