ஜோகூரில் மட்டும் கடந்த 4 மாதங்களில் மக்காவ் மோசடியில் சிக்கி RM9.5 மில்லியன் இழப்பு

ஜோகூர் பாரு, ஏப்ரல் 19 :

ஜோகூரில் மட்டும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நேற்று வரை, மக்காவ் மோசடி சம்பந்தப்பட்ட 209 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர், இதனால் மொத்தம் RM9.5 மில்லியன் இழப்பு ஏற்பட்டது என்று ஜோகூர் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைமை துணை ஆணையர் அம்ரான் முகமட் ஜூசின் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 90 வழக்குகளுடன் ஒப்பிடும்போது, வழக்குகளின் எண்ணிக்கை 132 விழுக்காடு அதிகரித்துள்ளது.

உள்நாட்டு வருவாய் வாரிய (IRB) அதிகாரிகள் அல்லது காப்பீட்டு முகவர்கள் என மாறுவேடமிட்டு, மோசடிக்குழுவால் பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டதாகக் கூறியதாக அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர்களுள் இளைஞர்கள், மூத்த குடிமக்கள்,வேலை செய்யும் பெரியவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என்று அனைத்து தரப்பினரும் அடங்குவர். “ஏமாற்றப்பட்டவர்களுக்கு மோசடிக்கு கும்பல் மூலம் முதல் அழைப்பு வந்த ஒரு வாரத்திற்குள் பணப் பரிவர்த்தனைகளை செய்வது வழக்கம்,” என்று அவர் கூறினார்.

அனைத்து பரிவர்த்தனைகளும் இணைய வங்கி பணப்பரிமாற்றம் மூலம் செய்யப்பட்டதாக அம்ரான் கூறினார், மேலும் பணம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கு மற்றும் பணப் பரிமாற்றத்தின் இரகசிய எண் (TAC) தொடர்பான விவரங்களை வழங்குமாறு பாதிக்கப்பட்டவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

“அழைப்பைப் பெறுபவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் மற்றும் அழைப்புகளைப் பெறும்போது அதனைப் பற்றிய உறுதிப்படுத்தலைப் பெற, அதனுடன் தொடர்புடைய ஏஜென்சிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் “வங்கி தொடர்பான விவரங்கள் உட்பட உங்கள் விவரங்களை ஒருபோதும் வெளியிட வேண்டாம் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here