தப்பியோடிய கைதிகளில் 88 பேர் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர்

பண்டார் பாரு, ஏப்ரல் 22 :

சுங்கை பாகாப்பில் உள்ள ரெலாவ் தற்காலிக குடிவரவு டிப்போவில் இருந்து, நேற்று கலவரம் செய்து தப்பி ஓடிய கைதிகளில் மீதமுள்ள 88 கைதிகளை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர்.

கெடா காவல்துறைத் தலைவர், ஆணையர் வான் ஹசன் வான் அஹ்மட் கூறுகையில், நேற்று நண்பகல் 12 மணி வரையிலான நடவடிக்கையில், தேடுதல் பகுதியைச் சுற்றி 8 கைதிகளை மீண்டும் தடுத்து வைக்க முடிந்தது என்று கூறினார்.

இன்றுவரை, 223 ஆண்கள், 88 பெண்கள், 68 சிறுவர்கள் மற்றும் 61 சிறுமிகள் என மொத்தம் 440 கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சியுள்ள “88 கைதிகளில் 71 ஆண்கள், 9 பெண்கள், 1 சிறுவன் மற்றும் 7 சிறுமிகளும் தேடப்பட்டு வருகின்றனர் என்றார்.

“இந்த கைதிகள் இன்னும் சுற்றியுள்ள பகுதியில் இருப்பதாகவும், அவர்கள் மூன்று நாட்களாக ஓடிக்கொண்டிருப்பதால், அவர்களின் நிலை சோர்வாகவும் பசியுடனும் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் தேடுதல் நடவடிக்கை பகுதியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும் கெடா குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) தலைவர் டத்தோ ஜி சுரேஷ் குமார் மற்றும் பந்தர் பஹாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் முகமட் அக்மல் ஹிசாம் அப்த் குபூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வான் ஹாசன் தொடர்ந்து கூறுகையில், எஞ்சிய கைதிகளைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையை இப்போது 24 மணி நேரமும் அவரது துறையினருடன் சேர்ந்து, வான் நடவடிக்கைப் படை (PGU), துப்பறியும் நாய் பிரிவு (K-9) மற்றும் பொது நடவடிக்கைப் படை (General Operations Force) உறுப்பினர்களின் உதவியை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

“Op Tutup மற்றும் Op Kesan ஆகிய நடவடிக்கைகள் மூலம் கெடா கன்டிஜென்ட் போலீஸ் தலைமையகம் (IPK), IPK பினாங்கு மற்றும் IPK பேராக் ஆகியவற்றில் இருந்து மொத்தம் 287 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளடக்கிய குழுவினரும் எஞ்சிய கைதிகளை இன்னும் தொடர்ந்து கண்காணிக்கின்றன.

“கெடாவில் உள்ள பண்டார் பாரு மற்றும் கூலிம் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகள், செபெராங் பிறை செலாத்தான், பினாங்கு மற்றும் கெரியான், பேராக் ஆகிய பகுதிகளில் தேடல் தொடர்கிறது ” என்று அவர் கூறினார்.

பொதுமக்கள் கைதிகளை பாதுகாக்க வேண்டாம் என்றும் அவ்வாறு செய்தாது கண்டறியப்பட்டால், குடிவரவுச் சட்டம் 1959/63 மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here