பண்டார் பாரு அம்பாங் சந்திப்பில் பல்நோக்கு வாகனம் மோதிய விபத்தில் பாதசாரி மரணம்

அம்பாங் ஜெயா, ஏப்ரல் 22 :

இன்று, இங்குள்ள ஜாலான் வாவாசன் 2/7 பண்டார் பாரு அம்பாங் சந்திப்பில், பெரோடுவா அல்சா பல்நோக்கு வாகனம் (MPV) மோதியதில் பாதசாரி ஒருவர் இறந்தார்.

அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமை, துணை ஆணையர் முகமட் ஃபாரூக் எஷாக் கூறுகையில், காலை 11 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், ஜாலான் வாவாசன் 2/4-ல் இருந்து ஜாலான் வவாசன் 2/7-ஐ நோக்கி பெரோடுவா அல்சா வாகனத்தின் ஓட்டுநர் U-திருப்பத்தில் வளைந்து கொண்டிருந்தபோது, பாதசாரி மீது மோதி, விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்றார்.

வாகனம் மோதியதால் பாதசாரி காரின் அடியில் சரிந்து விழுந்தார், இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

“பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், U – திருப்பத்தில் வளைவதற்கு முன், போக்குவரத்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யத் தவறிய கார் ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டது.

“இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41 (1) இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் தாமாக முன் வந்து, சம்பவம் பற்றிய தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் மற்றும் அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) போக்குவரத்து புலனாய்வு அதிகாரியை 012-4401093 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here