மருத்துவப் பயன்பாட்டிற்கு Hemp மற்றும் Ketum வளர்க்க அமைச்சரவை ஒப்புதல்: துணை அமைச்சர் தகவல்

மருத்துவ நோக்கங்களுக்காக hamp மற்றும் Ketum வளர்ப்பதில் அமைச்சரவைக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று டத்தோ ஜாஹிடி ஜைனுல் ஆபிடின் கூறுகிறார்.

இது அமைச்சரவை “பச்சைக்கொடி” காட்டியதற்கான அறிகுறி என்றும், மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி என்றும் துணைத் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 24) சினார் ஹரியனின் அறிக்கையில், சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீனுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஜாஹிடி மேற்கோள் காட்டினார்.

இருப்பினும், இது கெத்தும் தண்ணீரை உட்கொள்வதற்கான ஒப்புதல் அல்ல, ஆனால் மருத்துவத் துறையில் அதன் பயன்பாட்டிற்கு மட்டுமே என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றார்.

அனைத்துலக ரீதியில் hamp  மற்றும் கெத்தும் தேவை அதிகமாக இருப்பதாகவும் தற்போது hamp உற்பத்தியில் மூன்று நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் ஜாஹிடி மேலும் கூறினார்.

மலேசியா நான்காவது சந்தை வழங்குநராக மாறினால், அது மிகப் பெரியது மற்றும் லாபமும் அதிகமாக இருக்கும். ஒரு ஏக்கர் hamp RM3,000 க்கு மேல் வரக்கூடியது. எனவே 10 ஏக்கரில் குறைந்தபட்சம் RM30,000 கிடைக்கும்  என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 12 ஆம் தேதி hamp தொழில், மருத்துவ கஞ்சா மற்றும் கெத்தும் மலேசியாவில் பயன்படுத்துவதற்கான கொள்கை சிக்கல்கள் குறித்து விவாதிக்க பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோபுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாக மருத்துவ குழு (MCC) தெரிவித்துள்ளது.

எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு பிரதமர் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும், அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த குறித்து மேலும் விரிவாகக் கையாளப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here