போலீஸ் ரோந்து காருக்கு தீ வைத்த வேளாண்மைத் தொழிலாளி; குவாந்தானில் சம்பவம்

குவாந்தான், ஏப்ரல் 24 :

நேனாசி, பெக்கான், கம்போங் சிலிக்கான் என்ற இடத்தில் நேற்று இரவு நடந்த வன்முறையில் போலீஸ் ரோந்து கார் (எம்பிவி) எரிக்கப்பட்டது.

பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு துணை இயக்குநர் இஸ்மாயில் அப்துல் கானி கூறுகையில், இரவு 11.47 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக தமது துறைக்கு அழைப்பு வந்தது.

அவரது கூற்றுப்படி, நேனாசி மற்றும் பெக்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களின் உறுப்பினர்கள் குழு, ஒரு இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், வேளாண்மைத் தொழிலாளி ஒருவர் வேண்டுமென்றே வாகனத்திற்கு தீ வைத்ததன் காரணமாக, இத்தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

“சம்பவ இடத்திற்கு வந்ததும், பாதுகாப்பு காரணங்களால் அணைக்கும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை.

“இருப்பினும், நெனாசி காவல் நிலையத் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில், நிலைமை பாதுகாப்பாக இருந்த பிறகு, தீயணைப்புப் படையினர் அணைக்கும் பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் தீயினால் ஏற்பட்ட அழிவு 100 சதவீதம் என கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

“தீயணைப்பு விசாரணைக்கு உதவுவதற்கு K9 யூனிட்டின் உதவியை தீயணைப்புப் பிரிவினர் கோரினர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here