சட்டவிரோதமாக பொது இடத்தில் இரு கத்திகளை வைத்திருந்ததற்காக, வேலையில்லாத நபருக்கு 5 ஆண்டுகள் சிறை

கோலாலம்பூர், ஏப்ரல் 26 :

கடந்தாண்டு, அனுமதியின்றி பொது இடத்தில் இரண்டு கத்திகளை வைத்திருந்த குற்றச்சாட்டில், வேலையில்லாத நபருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

குற்றஞ்சாட்டப்பட்ட 31 வயதான முகமட் ஜமானி முஹமட்டிற்கு நீதிபதி சித்தி அமினா கசாலி இந்த தீர்ப்பினையளித்தார்.

மேலும், கடந்தாண்டு அக்டோபர் 13ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாள் முதல் அவர் சிறைத் தண்டனையை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

2021 அக்டோபர் 13 ஆம் தேதி இரவு 7.10 மணியளவில் கம்போங் பாசீர் பந்தாய் செல்லும் பாலத்தின் அருகேயுள்ள சாலையோரத்தில், அனுமதியின்றி ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அரிக்கும் மற்றும் வெடிக்கும் பொருட்கள் மற்றும் தாக்குதல் ஆயுதங்கள் சட்டம் 1958 இன் பிரிவு 6 (1) இன் கீழ் இந்த குற்றச்சாட்டு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை வழங்குகிறது மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரம்படி வழங்கவும் வழி செய்கிறது.

துணை அரசு வக்கீல் வான் அகமட் ஹக்கிமி வான் அகமட் ஜாபர் வழக்கு தொடர்ந்தார், ஆனால் குற்றஞ்சாட்டப்பட்ட முகமட் ஜமானி தரப்பில் வக்கீல் எவரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here