பத்து பாகாட், ஏப்ரல் 30 :
நேற்று, இங்குள்ள ஜாலான் குளுவாங்-ஆயிர் ஈத்தாம் , 37ஆவது கிலோமீட்டரில் ஒரு போலீஸ் ரோந்துப் பிரிவு வாகனம் உட்பட இரண்டு வாகனங்கள், மோட்டார் சைக்கிள் ஆகியன மோதிய விபத்தில், டிரெய்லரில் மோட்டார் சைக்கிள் உராய்ந்ததில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இரவு 10.45 மணியளவில் நடந்த சம்பவத்தில், மோட்டார் சைக்கிள், MPV வாகனம், லோரி மற்றும் டிரெய்லர் என நான்கு வாகனங்கள் மோதியதாக பத்து பாகாட் மாவட்ட காவல்துறை தலைமை, துணை ஆணையர் இஸ்மாயில் டோல்லா தெரிவித்தார்.
“குளுவாங் திசையிலிருந்து பத்து பாகாட் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் டிரெய்லரில் உராய்ந்தபோது விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
“டிரெய்லர் ஆயிர் ஈத்தாம் திசையில் இருந்து குளுவாங்கிற்கு வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் இருந்து MPV வாகனம் மற்றும் லோரி மீது மோதியது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
MPV வாகன ஓட்டுநர் இடது பாதையில் செல்ல முயன்றார், ஆனால் அவர் அதே பாதையில் வந்த லோரியுடன் மோதினார்.
“விபத்தின் விளைவாக, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார், மேலும் அவர் குளுவாங்கிலுள்ள என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனைக்கு (HEBHK) அனுப்பப்பட்டார்.
“குளுவாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் மற்றும் லோரியின் ஓட்டுநர் மற்றும் MPV வாகன ஓட்டுநர் எவரும் காயமடையவில்லை” என்று அவர் கூறினார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 இன் பிரிவு 43 (1) இன் படி இவ்விபத்து விசாரிக்கப்பட்டது என்றார்.









