ரவாங்கிலிருந்து கோபேங் செல்லும் சாலையில் 150 கிலோமீட்டர் வரை நீடித்த போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூர், மே 1 :

ஹரிராயா அய்டில்ஃபிட்ரியை கொண்டாடுவதற்காக அதிகமான மக்கள் தங்கள் கிராமங்களுக்கும் சொந்த ஊர்களுக்கும் திரும்பியதால், வாகனங்களின் எண்ணிக்கை நெடுஞ்சாலைகளில் அதிகரித்துள்ளன.

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் (PLUS) 150 கிலோமீட்டர் வரை நீடித்த போக்குவரத்து நெரிசல், அதாவது ரவாங்கிலிருந்து வடக்கு நோக்கி கோபெங் வரையிலான பாதையில் நண்பகல் 1 மணியளவில் பதிவாகியுள்ளது.

PLUS இன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஸ்லிம் ரிவரிலிருந்து சுங்காய் வரையிலான போக்குவரத்து மிகவும் நெருக்கமான பாதைகளில் ஒன்றாக உள்ளது, மேலும் சாலையைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.

தெற்கில், பண்டார் ஐன்ஸ்டேல் (Bandar Ainsdale) முதல் சிரம்பான் வரையிலும், புத்ரா மஹ்கோட்டா முதல் நீலாய் வரையிலும் (8 கி.மீ) 12 கி.மீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஸ்கூடாயில் இருந்து செனாய் உத்தாரா வரை வாகனங்கள் மெதுவாக நகர்வதோடு, தெற்கே செல்லும் மற்ற பகுதிகளில் போக்குவரத்து இன்னும் சீராக உள்ளது மற்றும் கட்டுப்பாட்டில் உள்ளது” என்று PLUS பேச்சாளர் கூறினார்.

இதற்கிடையில், குவாந்தானில் இருந்து கோலா திரெங்கானு வரையிலான போக்குவரத்து, சீராக இருப்பதாகவும், கோலா திரெங்கானு டோல் பிளாசா நகரின் மையத்தை நோக்கி வெளியேறும் முன் 1.3 கிமீ நெரிசல் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காராக் டோல் பிளாசாவிலிருந்து குவாந்தான் வரை, சாலையின் இரு திசைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது.

பொதுமக்கள் 1800-88-0000 என்ற கட்டணமில்லா ப்ளஸ்லைனிலிருந்து சமீபத்திய போக்குவரத்துத் தகவலைப் பெறலாம் மற்றும் www.twitter.com/plustrafik என்ற டுவிட்டர் கணக்கு அல்லது மலேசியா நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டணமில்லா லைன் 1-800-88-7752 மற்றும் Twitter இல் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here