சிரம்பான், மே 4 :
வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிச் சென்றது தொடர்பான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, இரண்டு வாகனங்களின் உரிமையாளர்களும் ஓட்டுநர்களுமான இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிரம்பான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவின் (BSPT) செயல்பாட்டு புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் பதிவுகளின் அடிப்படையில், இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட காவல்துறைத் தலைவர்,துணை ஆணையர் நந்தா மரோஃப் தெரிவித்தார்.
“Audi A4 வகை காரை ஓட்டிய முதல் சந்தேக நபர் 36 வயதுடையவர் என்றும், Toyota Wish காரை ஓட்டிய இரண்டாவது சந்தேக நபர் 34 வயதுடையவர் என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
“முதல் சந்தேக நபர் மே 2, 2022 அன்று இரவு 9 மணியளவில் சரணடைந்தார், இரண்டாவது சந்தேக நபர் Toyota Wish காரின் ஓட்டுநர் நேற்று மாலை 6.45 மணியளவில் சரணடைந்தார். விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேகநபர்கள் இருவரும் மற்றும் அவர்களும் வாகனங்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் கிலோமீட்டர் 269 முதல் கிலோமீட்டர் 238 வரை தெற்கு நோக்கி செல்லும் திசையில் ஜிக்-ஜாக் எனப்படும் ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட இரண்டு வாகனங்களின் ஓட்டுனர்களை போலீசார் கண்காணித்து வருவதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
ஒரு நிமிடம் 50 வினாடிகள் நீடித்த இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களிலும் பரவியது.
இதற்கிடையில், பல மாதங்களாக கடன் பாக்கி உள்ளதாகக் கூறப்படும் Toyota Wish காரை Audi Aகார் ஓட்டுநர் இழுத்துச் செல்ல விரும்பியதே சம்பவத்திற்கான உண்மையான காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக நந்தா கூறினார்.
ஆனால், Toyota Wish காரை அதன் ஓட்டுநர் நிறுத்த மறுத்ததால் இந்த சம்பவம் ஏற்பட்டது என்றார்.
“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 42 (1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன” என்று அவர் கூறினார்.









