விடுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

கோலாலம்பூர், மே 4 :

இங்குள்ள புக்கிட் பிந்தாங்கில் உள்ள விடுதியில்,நேற்று ஒரு நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சந்தேக நபர்கள் முறையே 40 மற்றும் 50 வயதுடைய உள்ளூர்வாசிகள் என்று டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமை, துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.

இறந்தவரின் நண்பரான சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ததைத் தொடர்ந்து, இரண்டு சந்தேக நபர்களின் அடையாளங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

“கைதுசெய்யப்பட்ட 40 வயதுடைய உள்ளூர் நபர் இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஆறு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இரண்டு சந்தேக நபர்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 7 மணியளவில் நெற்றியில் சுடப்பட்டதாக நம்பப்படும் காயங்களுடன் 49 வயதுடைய ஆணின் சடலம் விடுதி அறையில் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இறந்த பெண் நேற்று மாலை 6 மணியளவில் காதலனுடன் ஹோட்டலுக்குச் சென்றது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் ஜோகூரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது, ஆனால் இறந்தவரும் அவரது நண்பரும் கோலாலம்பூருக்கு வந்ததன் நோக்கம் இன்னும் போலீஸ் விசாரணையில் உள்ளது.

இதற்கிடையில், கொலைக்கான காரணத்தை அடையாளம் காண்பது உள்ளிட்ட மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருவதாக நூர் டெல்ஹான் கூறினார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்களை, டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தை (IPD) 03-26002222 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்திலோ தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவ முன்வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here