ஹஜ் யாத்திரைக்கான முதல் விமானம் மே 31 மலேசியாவிலிருந்து மக்காவிற்கு பறக்கும்- பிரதமர் துறை அமைச்சர் தகவல்

புக்கிட் காந்தாங், மே 5 :

மலேசிய ஹஜ் யாத்ரீகர்களின் முதல் விமானம் மக்காவிற்கு மே 31 ஆம் தேதி புறப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்று பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்) செனட்டர் டத்தோ இட்ரிஸ் அஹ்மட் தெரிவித்தார்.

இந்த விஷயத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் சீராக நடந்து வருவதாகவும், ஏப்ரல் 24 அன்று லெம்பகா தாபுங் ஹாஜி (TH) அனுப்பிய சலுகைக் கடிதத்திற்கு யாத்ரீகர்கள் பதிலளிப்பதற்காக அவரது துறை காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

“இந்தச் சலுகையை பயன்படுத்தும் யாத்ரீகர்கள், அனைத்துலக கடப்பிதழ்களை தயார் நிலையில் வைத்தல், தடுப்பூசிகளின் நிலை மற்றும் நல்ல ஆரோக்கியம் போன்றவற்றில் கானம் செலுத்த வேண்டும்,” என்று அவர் இன்று கம்போங் சுங்கைப் பேட்டையில் உள்ள ஹரி ராயா அய்டில்ஃபிட்ரி 2022 உடன் இணைந்து நடந்த திறந்த இல்ல உபசரிப்பில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இந்த ஆண்டு மலேசிய யாத்ரீகர்களுக்கான ஒதுக்கீடு 14,306 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here