பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு 40 வகையான உணவுகளுடன் களைகட்டுகிறது

புத்ராஜெயா, மே 8 :

கோவிட் -19 தொற்றுநோயையின் தாக்கத்தினால் இரண்டு வருடங்கள் கழித்து, இன்று, கொம்ப்ளெக்ஸ் ஸ்ரீ பெர்டானாவில் பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களின் திறந்த இல்லத்தில் மலேசிய குடும்பமாக பொதுமக்கள் மீண்டும் கூடினர்.

இன்று வழக்கத்துக்கு மாறாக கொம்ப்ளெக்ஸ் ஸ்ரீ பெர்டானா வளாகத்தின் கதவுகள் காலை 9.30க்கு திறக்கப்பட்டு, மக்களை வரவேற்க தயாராக இருந்தன.

இன்று காலை 10 மணி நிலவரப்படி 5,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் திறந்த இல்லத்திற்கு வந்திருந்தனர்.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இன, மத பின்னணியின்றி ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் உற்சாகமாக பங்குகொள்கின்றனர். இந்த உபசரிப்பி இன்று மாலை 4 மணி வரை நடைபெறும்.

விருந்தினர்களை கவரும் வகையில் மொத்தம் 40 வகையான உணவு வகைகள் கிராமிய கருத்துடன் வழங்கப்படுகின்றன.

மே 1 முதல் நிலையான இயக்க முறைமை (SOP) தளர்த்தப்பட்டிப்பதால், முகக்கவசங்கள் அணிவது, திறந்த வெளியில் உடல் ரீதியிலான இடைவெளியையும் நடைமுறைப்படுத்டுவது போன்றவை அவசியமில்லை, ஆனால் பார்வையாளர்கள் இன்னும் பாதுகாப்பையும் சுயக்கட்டுப்பாட்டையும் பேணுகிறார்கள்.

இதற்கிடையில், ஸ்ரீ பெர்டானா வளாகத்திற்குள் நுழையும் விருந்தினர்கள், குடை மற்றும் கத்தரிக்கோல் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை வளாகத்திற்குள் கொண்டு வர வேண்டாம் என்று பாதுகாப்புப் பணியாளர்களால் நினைவூட்டப்படுகிறார்கள்.

சிவப்பு நிற மலாய் சடடை அணிந்துகொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், மற்றும் அவரது பாரியார் டத்தின் ஸ்ரீ முஹைனி ஆகியோர் இன்முகத்தோடு அனைத்து குடிமக்களையும் உற்சாகமாக வரவேற்றார்.

‘Raya Keluarga Malaysia, Syawal Dirai, Nikmat Disyukuri’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, பிரதமர் துறை அமைச்சர் (பொருளாதாரம்) டத்தோஸ்ரீ முஸ்தபா முகமது, அமைச்சர் உயர் கல்வி டத்தோஸ்ரீ டாக்டர் நோரைனி அஹ்மட், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி மற்றும் பிரதமர் துறை அமைச்சர் (சபா மற்றும் சரவாக் விவகாரங்கள்) டத்தோஸ்ரீ டாக்டர் மாக்சிமஸ் ஓங்கிலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வங்சா மஜுவைச் சேர்ந்த முர்னியாட்டி ரஹ்மத், 59, என்ற பார்வையாளர் கூறுகையில், தனக்கு ஐந்து குழந்தைகள் இருப்பதாகவும், ஸ்ரீ பெர்டானா வளாகத்திற்கு முன் காலை 9 மணி முதல் வரிசையில் நிநின்றதாகவும் கூறினார்.

“இது எனது முதல் முயற்சி, அதிர்ஷ்டவசமாக நாங்கள் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்திற்குள் நுழைய முடிந்தது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், தலைநகரைச் சேர்ந்த 73 வயதான சூ கெங் சுங், துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான 1980 களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு திறந்த இல்லத்திற்கு வரும் வாய்ப்பை தவறவிட்டதில்லை என்றார்.

“ரெண்டாங் மற்றும் கெரோபோக் லெகோர் போன்ற மலாய் உணவுகளை நான் ருசிக்க விரும்புகிறேன். “அதுதான் KL இல் இருந்து 8 மணிக்கு பஸ் ஏறினாலும் பரவாயில்லை என்று கிளம்பி வந்துவிட்டேன்” என்றார்.

கோலாலம்பூரில் உள்ள கெப்போங்கைச் சேர்ந்த ஆர்.செல்வி, 50, ஸ்ரீ பெர்டானாவில் உள்ள அய்டில்ஃபிட்ரி திறந்த இல்லத்தில் 10 முறைக்கு மேல் தான் கலந்து கொண்டதாக கூறினார்.

“நான் பல தலைவர்களுடன் கைகுலுக்கியுள்ளேன், இன்று பிரதமர் இஸ்மாயில் சப்ரியைப் பார்க்க ஆவலாக உள்ளேன்” என்று பாரம்பரிய பஞ்சாபி உடை அணிந்த அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here