சிலாங்கூரில் இதுவரை 9,357 டிங்கி காய்ச்சல் வழக்குகள் பதிவு : மாநில சுகாதார இயக்குநர் தகவல்

கோலாலம்பூர், மே 13 :

சிலாங்கூரில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 9,357 டிங்கி காய்ச்சல் வழக்குகள் பதிவாகியுள்ளன என்று மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஷாரி நகாடிமான் தெரிவித்தார்.

இந்த வருடம் டிங்கி நோயினால் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் அவர் கூறினார்.

அவரது கருத்துப்படி, இந்த ஆண்டு மே 1 முதல் 7 வரையிலான 18ஆவது எபிட் வாரத்தில் (ME 18), சிலாங்கூரில் மொத்தம் 470 டிங்கி வழக்குகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய வாரத்தில் 656 வழக்குகளுடன் ஒப்பிடும்போது 28.4 சதவீதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து, பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில், ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் இடங்களை அகற்ற வேண்டும் என, அவர் மேலும் அறிவுறுத்தினார்.

டிங்கி கட்டுப்பாடு மற்றும் தடுப்பு தொடர்பான தகவல்களுக்கு, https://www.infosihat.gov.my/index.php/demam-denggi என்ற இணையதளத்தில் பெறலாம் என்றும் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here