வாகனமோட்டும் போது கைபேசியை பயன்படுத்திய போலீஸ்காரருக்கு அபராதம்

ஒரு போலீஸ்காரர் கைபேசியை பயன்படுத்தி வாகனம் ஓட்டும்போது சிக்கியதால் அபராதம் விதிக்கப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், போலீஸ்காரர் காதில் போனை வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவதைக் காணலாம்.

நேற்று காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீத் தெரிவித்தார். போலீஸ்காரர் மீது விசாரணை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பணியில் இருக்கும் பணியாளர்கள் செய்யும் எந்தவொரு தவறான நடத்தையிலும் காவல்துறை சமரசம் செய்யாது என்று ஃபக்ருதீன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here