நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் மலை ஏறுபவர்களின் உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

ஈப்போ, மே 16 :

நேற்று இங்குள்ள ஜாலான் சிம்பாங் பூலாய் -கேமரன் ஹைலேண்ட்ஸ் பகுதியில் உள்ள குனுங் சிகு வனப் பகுதியில், நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் மலை ஏறுபவர்களின் உடல் பாகங்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரால் கண்டெடுக்கப்பட்டது.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேராக் மாநில செயல்பாட்டு துணை இயக்குநர் முஹமட் ஷஹ்ரிசல் அரிஸ் கூறுகையில், நேற்று மாலை 5.05 மணியளவில் மலேசிய சிறப்பு தந்திரோபாய மீட்பு நடவடிக்கைக் குழு (STORM) உறுப்பினர்களால் மலை ஏறுபவர்களின் உடல் பாகம் என நம்பப்படும், ஒருவரது இடது கால் கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரிழந்தவர் பலத்த நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் கடைசி இடத்திலிருந்து, 300 மீட்டர் தொலைவில் உடல் உறுப்பு காணப்பட்டதாக அவர் கூறினார்.

“கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகம் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட இருவரையும் தேடும் நடவடிக்கை இரவு 7 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முகமட் ஷஹ்ரிசலின் கூற்றுப்படி, அவரது துறை 800 மீட்டர் நீளமுள்ள நீர்வழியைக் கண்டுபிடித்து, தேடுதலில் கவனம் செலுத்தும்.

“செயல்பாட்டின் முதல் நாளான நேற்று, பாதிக்கப்பட்ட இருவரைத் தேடும் பணி ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தது” என்று அவர் கூறினார்.

குனுங் சுகு நிரந்தர வனப் பகுதியில் 29 நபர்களுடன் மலை ஏறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு பெண் மலை ஏறுபவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக முன்பு ஊடகங்கள் தெரிவித்தன.

உயிரிழந்தவர்கள் 30 வயதான சீ சு யென் மற்றும் 46 வயதான எங் யீ செவ் என அடையாளம் காணப்பட்டனர்.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் BBP சிம்பாங் பூலாயின் 22 உறுப்பினர்கள் மலேசிய சிறப்பு நடவடிக்கை, தந்திரோபாய மற்றும் மீட்புக் குழு (STORM) ஆகியன ஈடுபட்டுள்ளன.

இந்த நடவடிக்கைக்கு உதவியாக, காவல்துறையில் கேமரன் ஹைலேண்ட்ஸ் மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD), மலேசிய குடிமைத் தற்காப்புப் படை (APM), மலை வழிகாட்டிகள், பேராக் மற்றும் பகாங் வனவியல் துறை மற்றும் கேமரன் ஹைலேண்ட்ஸ் ரேடியோ பொழுதுபோக்கு மற்றும் தொடர்பு கிளப் (RCRC) அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களும் பங்குகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here