அதிக அலைகள் காரணமாக பினாங்கு திறந்த வெளி நீர்நிலைப் பூங்கா (Esplanade waterfront) நடைபாதை தற்காலிகமாக மூடப்பட்டது

ஜார்ஜ் டவுன், மே 17 :

அதிக அலைகள் காரணமாக பினாங்கு திறந்த வெளி நீர்நிலைப் பூங்கா (Esplanade waterfront) நடைபாதையை  பினாங்கு நகர சபை (MBPP) தற்காலிகமாக மூடியுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் அதிக அலைகள் ஏற்பட்டதை அடுத்து இன்று பிற்பகல் முதல் மூடப்படுவதாக பினாங்கு நகர சபை அறிவித்தது.

பொது மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக, அதிக அலைகளின் போது நீர்முனைக்கு அருகில் இருப்பதைத் தவிர்க்கவும் அது அறிவுறுத்தியது.

கடந்த வெள்ளியன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட திறந்த வெளி நீர்நிலைப் பூங்கா நடைபாதை, RM12.9 மில்லியன் செலவில், அனைத்து தரப்பினரும் விரும்பும்வகையில், சுவாரசியங்களை உள்ளடக்கிய தரமான பொது இடங்களைத் தயாரிக்கும் நோக்கில், இந்தப் பகுதியை மேம்படுத்தும் முயற்சியில் இதுவும் ஒன்றாகும்.

சுற்றியுள்ள பகுதிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் இந்த மேம்படுத்தல் செய்யப்பட்டது.

மேடான் செலரா ரெனாங்கிலிருந்து ரோயல் மலேசியன் கடற்படைத் தளம் வரையிலான 570 மீட்டர் பாதசாரி நடைபாதையை நீர்முனை சீரமைப்பின் வளர்ச்சி உள்ளடக்கியது.

இந்த திட்டம் முழுவதுமாக பினாங்கு நகர சபையால் ஏற்கப்பட்டது ஆனால் இந்த ஆண்டு தொடங்கும் லீனியர் கார்டன் திட்டத்திற்காக பினாங்கு அரசாங்கம் RM1.4 மில்லியனை மேலதிக நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here