உலு சிலாங்கூரில் அதிகாலை நிலச்சரிவுக்குப் பிறகு சாலை மீண்டும் திறக்கப்பட்டது

கோலாலம்பூர் :

நிலச்சரிவுக்குப் பிறகு மூடப்பட்ட ஜாலான் கோலா குபு பாரு மீண்டும் திறக்கப்பட்டது.

இன்று சனிக்கிழமை (அக் 5) அதிகாலை 4.15 மணியளவில் நிலச்சரிவு குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று உலு சிலாங்கூர் பொதுப்பணித் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறித்த நிலச்சரிவு காரணமாக சாலையின் சுமார் 20 மீற்றர் பகுதியை பாதித்தது. அதன் பின்னர் காலை 7.15 மணிக்கு சாலை மீண்டும் திறக்கப்பட்டது,” என்று அது இன்று வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் கூறியது.

நேற்று சிலாங்கூர் மாநிலத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது, இது அம்மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் திடீர் வெள்ளத்திற்கு வழிவகுத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here