கெத்தும் இலைகளை ஏற்றுமதி செய்வதற்கான முன்மொழிவு அறிக்கை தயார் என்கிறார் கெடா மந்திரி பெசார்

அலோர் ஸ்டார், மே 18 :

கெடா மாநிலப் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு (BPEN) தாய்லாந்திற்கு மருத்துவ நோக்கங்களுக்காக கெத்தும் இலைகளை ஏற்றுமதி செய்வதற்கான, முன்மொழிவு அறிக்கையை நிறைவு செய்துள்ளது, மேலும் அதை மாநில நிர்வாகக் குழுவில் சமர்ப்பிக்கும் முன், அதை விவாதித்து சரிசெய்யும் என்று கெடா மந்திரி பெசார் தெரிவித்துள்ளார்.

இந்த விண்ணப்பம் மத்திய அரசுக்கு அனுப்பப்படுவதற்கு முன், ஒருவேளை அடுத்த வாரம் மாநில செயற்குழுவில் அந்த முன்மொழிவு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

இன்று நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கெத்தும் இலைகளை ஏற்றுமதி செய்வதற்கான மாநில அரசின் திட்டம் தொடர்பான சமீபத்திய வளர்ச்சி குறித்து கேட்டபோது, “இது மத்திய அரசின் பரிசீலனைக்கு எங்களிடமிருந்து கோரப்படும் ஒரு விண்ணப்பம்” என்று கூறினார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம், கெத்தும் இலைகள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையாக, மருத்துவ நோக்கங்களுக்காக, குறிப்பாக தாய்லாந்திற்கு கெத்தும் இலைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று , முஹமட் சனுசி பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here