பள்ளி மாணவர்களிடையே மின் சிகரெட் பயன்பாடு தொடர்பில் கண்காணிக்கப்படும்- துணை உள்துறை அமைச்சர்

தெமெர்லோ, மே 21 :

பள்ளி மாணவர்களிடையே மின் சிகரெட் அல்லது வேப் பயன்பாடு குறித்து, மலேசியக் காவல்துறை மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (AADK) ஆகியவை சீரற்ற ஆய்வுகளை நடத்தி, கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று துணை உள்துறை அமைச்சர் 1 டத்தோஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் முகமட் சைத் தெரிவித்துள்ளார்.

தற்காலத்தில் வேப்பிங் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கை அவசியமானது என்றார்.

“பள்ளி மாணவர்கள் மின்னியல் சிகரெட்டிற்கு அடிமையாகி இருப்பதாக எமக்குத் தகவல் கிடைத்தது. உண்மையில், ‘காளான்’ போன்ற சில சுவைகள் கொண்ட மின்னியல் சிகரெட்டுகள் மிகவும் ஆபத்தானவை.

“அவர்கள் அதற்கு அடிமையாக இருப்பது நிரூபிக்கப்பட்டால், அவர்களை சிகிச்சை மையத்திற்கு அனுப்ப வேண்டும்,” என்று அவர் இன்று AADK உடன் இணைந்த சமூகத் திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிகழ்வில் AADK இயக்குநர் ஜெனரல் சுடெக்னோ அஹ்மட் பெலோனும் கலந்துகொண்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here