லாவாஸ், மே 21:
நேற்றிரவு, லாவாஸ் ஆறு கரையை உடைத்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, விமான நிலைய ஓடுபாதை வெள்ளத்தில் மூழ்கியதை தொடர்ந்து, லாவாஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
லாவாஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் அஸ்மான் இப்ராஹிம் கூறுகையில், விமான நிலையத்தில் நீர் மட்டம் மூன்று மீட்டர் ஆழத்தில் இருந்தது. அங்கு பெய்த கனமழையை காரணமாக இவ்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.
“எனவே, விமான நிலையத்தை சுத்தம் செய்வதற்கும், குப்பைகளை அகற்றுவதற்கும் அதனை தற்காலிகமாக மூட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மார்ச் மாதத்தில், விமான நிலையம் ஓடுபாதையில் வெள்ளம் ஏற்பட்டதால் மூன்று நாட்களுக்கு மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மூன்று நாள் மூடல் காரணமாக ரூரல் ஏர் சர்வீசஸ் ஆபரேட்டர் MASwings 48 விமானங்களை ரத்து செய்தது, இது 426 விமான பயணிகளை பாதித்தது குறிப்பிடத்தக்கது .
விமான நிலையத்தைத் தவிர, எஸ்கே கெரங்கான் லாவாஸும் நேற்று இரவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அஸ்மான் கூறினார்.