சிபிதாங், மே 22 :
சிபிதாங் மாவட்டத்தில் நிலைமை சீரடைந்ததால், பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களை சேர்ந்த 32 பேரும் இன்று தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
சபா மாநில பேரிடர் மேலாண்மை குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மாலை பாதிக்கப்பட்டவர்களுக்காக இங்குள்ள டேவான் மினி மெசாபோலில் அமைக்கப்பட்ட வெள்ள நிவாரண மையம் இன்று மாலை மூடப்பட்டது.
“பாதிக்கப்பட்ட பகுதியில் வெள்ளம் குறைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கண்டறிந்தனர் அதனைத்தொடர்ந்து, வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தமது வீடுகளுக்கு திரும்பி செல்ல அனுமதிக்கப்பட்டனர்,” என்று அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சுங்கை மெங்கலாங் மற்றும் சுங்கை லுகுடான் ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து நிரம்பி வழிவதால் 17 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின என்பது குறிப்பிடத்தக்கது.