மலேசியாவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மூன்றாவது முறையாக எவரெஸ்ட் சிகரம் தொட்டு சாதனை

மூன்றாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய டி.ரவிச்சந்திரனை KL சர்வதேச விமான நிலையத்தில் அவரது மனைவி லீலா ராமமூர்த்தி வரவேற்றார்.

உலகின் மிக உயரமான சிகரத்தை இரண்டு முறை தனியாக ஏறி சாதனை படைத்த டி.ரவிச்சந்திரன் மவுண்ட் எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் 3ஆவது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார். எனினும் இம்முறை முறையே 40 மற்றும் 64 வயதுடைய இரண்டு மலை ஏறுபவர்களை தன்னுடன் அழைத்துக்கொண்டு மே 12 அன்று பணியை வெற்றிகரமாக முடித்தார்.

40 மற்றும் 64 வயதுடைய இருவரை அழைத்து சென்றது இந்த முறை முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நான் சாதித்ததில் முழு திருப்தியும் பெருமையும் அடைகிறேன் என்று இன்று (மே 22)  கோலாலம்பூர் அனைத்துலக  விமான நிலையத்தில் சந்தித்தபோது அவர் கூறினார்.  “இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தைக் கைப்பற்றியவர்களில் 64 வயதானவர்தான் அதிக வயதானவர்” என்று  மேற்கோள் காட்டினார்.

பயணத்தில் தனது அனுபவத்தை நினைவு கூர்ந்த ரவிச்சந்திரன் 57, தன்னுடன் உடன் பயணம் செய்தவர்களின்  உடல் மற்றும் மன வலிமையை உறுதி செய்வதே சவாலானது என்று கூறினார்.

நெகிரி செம்பிலானை சேர்ந்த ரவிச்சந்திரன் தனது மூன்றாவது முறை பயணத்தை மே மாதம் தொடங்கினார். முதலில் அடிவாரம், இரண்டாவது மற்றும் மூன்றாவது முகாம்கள் வழியாக பயணத்தை தொடங்கிய அவர், மே 5 அன்று ஓய்வெடுத்து மே 9 முதல் 11 வரை பயணத்தைத் தொடர்ந்தார். மே 12 அன்று உச்சத்தை அடைந்தார். இந்த குழு மே 15 அன்று கீழே இறங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here