மலேசிய- சிங்கப்பூருக்கு இடையிலான ஃபையர்ஃபிளை விமான சேவை மீண்டும் தொடங்குகிறது

கோலாலம்பூர், மே 23 :

மலேசியா- சிங்கப்பூர் விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கவுள்ளதாக, மலேசியாவின் ‘பட்ஜெட்’ விமான சேவையான ஃபையர்ஃபிளை விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று சூழலால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் சிங்கப்பூரின் சிலேத்தார் விமான நிலையத்திலிருந்து சிலாங்கூரின் சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அசிஸ் ஷா விமான நிலையத்திற்கு இடையே இந்த விமானப்போக்குவரத்து சேவை அமையும்.

மலேசியா- சிங்கப்பூருக்கு இடையேயான ஃபையர்ஃபிளை விமானத்திற்கான ஒரு வழி கட்டணம் 119 வெள்ளியாகும் ($39 ).

ஒவ்வொரு நாளும் இரண்டு விமான சேவைகள் சிலேத்தார் விமான நிலையத்திலிருந்து செயல்படும் என ஃபையர்ஃபிளை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here