பினாங்கில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெற்றோர் உட்பட 6 குடும்ப உறுப்பினர்கள் கைது

ஜார்ஜ் டவுன், மே 23 :

மே 18 அன்று மாநிலம் முழுவதும் பினாங்கு போலீசார் மேற்கொண்ட தொடர்ச்சியான போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சோதனைகளில் RM298,332 மதிப்புள்ள 8,287 கிராம் எடையுள்ள சியாபுவை வைத்திருந்த ஒரு குடும்பத்தின் பெற்றோர் உட்பட ஆறு குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாநில போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவர், ஏசிபி முகமட் ஷுகைரி அப்துல் சாபே கூறுகையில், கடந்த ஒரு வாரமாக நடத்தப்பட்ட தகவல் மற்றும் உளவுத்துறையின் அடிப்படையில், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், நிபோங் தேபாலின் சுங்கை பாகாப் சாலையோரம், மாலை 6 மணிக்கு 38 வயதான உள்ளூர் நபரைக் கைது செய்தனர்.

தொழிற்சாலை வேன் ஓட்டுநராகப் பணிபுரியும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் இவரிடம் இருந்து RM223,596 மதிப்புள்ள 6,112 கிராம் சியாபு அடங்கிய ‘சீன தேநீர்”யின் ஆறு பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர்.

அந்த நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புக்கிட் தெங்கா, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள அவரது குடும்பத்தினரின் வீட்டை போலீசார் சோதனை செய்து, 62 மற்றும் 64 வயதுடைய அந்த நபரின் பெற்றோரையும், 36 மற்றும் 38 வயதுடைய கணவன்-மனைவியான மற்ற குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்தனர். ” என்று இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இந்தச் சோதனையில், RM74,736 மதிப்புள்ள 2,076 கிராம் எடையுள்ள சியாபுவைக் கொண்ட இரண்டு ‘சீன தேநீர்’ பொட்டலங்களை போலீசார் கைப்பற்றியதாக அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து பட்டர்வொர்த்தின் தாமான் பாகனில் உள்ள ஒரு வீட்டில் மற்றொரு சோதனைக்கு வழிவகுத்தது.

அங்கு போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும், அங்கிருந்த 38 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்றும் அந்த பெண் முன்பு தடுத்து வைக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர் என்றும், இந்தக் கும்பலின் உறுப்பினர் என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று முகமட் ஷுகைரி கூறினார்.

மேலதிக விசாரணையில், இந்தக் கும்பல் போதைப்பொருட்களை உள்ளூர் சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்பு, அதிகாரிகளால் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக சீன தேயிலை பொதிகளில் பேக்கேஜிங் செய்வதன் மூலம், வெளிநாடுகளில் உள்ள அவர்களின் நெட்வொர்க்கிலிருந்து போதைப்பொருள் விநியோகத்தைப் பெற்றது.

“சந்தேக நபர்களில் இருவர் தொழிற்சாலை வேன் ஓட்டுநர்களாக பணிபுரிந்தனர், மற்றவர்கள் வேலை செய்யவில்லை, மேலும் கடந்த ஆண்டு முதல் இக்குடும்பம் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

அக் குடும்பத்தினரிடமிருந்து RM119,204.26 மதிப்புள்ள Toyota Wish மற்றும் பிஎம்டபிள்யூ மற்றும் நகைகள் உள்ளிட்ட நான்கு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

“அனைத்து சந்தேக நபர்களும் மே 25 ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்றும் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருட்களையும் 41,435 போதைப்பித்தர்கள் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here