நாட்டில் மோசமடைந்து வரும் போக்குவரத்து நெரிசலை உடனடியாக நிவர்த்தி செய்யுங்கள் என்கிறார் முன்னாள் போக்குவரத்து அமைச்சர்

கோலாலம்பூர், மே 27 :

தற்போது நாட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் வலியுறுத்தியுள்ளார்.

பொதுப் போக்குவரத்து சேவை தான் நினைத்தது போல் சீராக இல்லை என்பதை தான் கவனித்ததாக லோக் கூறினார்.

“டாம்டாம் (TomTom Traffic Index) போக்குவரத்துக் குறியீட்டின்படி, கோவிட் -19 தொற்றுநோய்க்கு முன்பு இருந்த சாலைப் போக்குவரத்து நெரிசலுடன் ஒப்பிடும்போது, தலைநகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் நெரிசல் கடந்த ஏழு நாட்களில் மிக மோசமாக உள்ளது என்றார்.

“முன்பு, நாங்கள் பரபரப்பான நேரங்களில் (peak hours) மட்டுமே போக்குவரத்து நெரிசலை அனுபவித்தோம், ஆனால் இப்போது பிற்பகல் 3 மணிக்கே அதாவது நெரிசல் இல்லாத நேரங்களில் கூட போக்குவரத்து நெரிசல் உள்ளது,” என்று அவர் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் இந்த நிலைமை ஏற்படவில்லை என்றும், சமீபத்தில் சிரம்பானுக்குச் சென்ற பயணத்தின் போதும் தான் இதேபோன்ற போக்குவரத்து நெரிசலை சந்தித்ததாகவும் லோக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here